யாழ்மாணவரின் தலைவிதி-முடிந்தது

உதயனில் ஒருவருடத்திற்கு முன்பு ஒரு கட்டுரைவெளிவந்தது பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களிடம் தோற்றுவிட்டார்களா? மாணவர்களால் ஏளனமாக நோக்கப்படுகின்றார்களா? என்பதுதான் தலைப்பு  உள்ளே டீப்பாக அவளவாக எழுதவில்லை சபை நாகரீகம் என்றுவிட்டார்களோ தெரியாது ஆனால் ஒரு ஸ்ருடன்ற்றாக நிலமைகளை அனுபவித்தமையால் அப்பட்டமான உண்மைகள் என்னவென்று எனக்குத்தெரியும்.அதாவது ஆசிரியர்களுக்குமாணவர்கள் வைக்கும் பட்டப்பெயர்கள் அவர்களை அவர்கள் இல்லாத நேரத்தில் இமிட்டேட் செய்வது போன்றவை இந்தத்தலைப்பிற்குள் அடங்காது அது தொடர்ந்துவரும் ஸ்ருடன்ற் கல்சர்.அந்த விவாதம் இப்போதுவேண்டாம் உண்மையில் ஆசியர் என்பவர் வேறு குரு என்பவர் வேறு ஆனால் இப்போது இரண்டையும் ஒன்றாக்கிவிட்டார்கள். 

பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களால் ஏன் ஏளனமாக நோக்க வேண்டும். காரணம்  மாணவர்கள் முற்றுமுழுதாக தமது படிப்பில் நம்பியிருப்பது  தனியார்கல்வி நிறுவன ஆசிரியர்களை அவர்களின் படிப்பித்தல்களை அவர்களது முறைகளை அதோடு தனியார் கல்வி நிலையம் நடத்தும் ஆசிரியர்களின் கௌரவம் மரியாதை மாணவர்களிடத்தில் எதைவைத்துக்கொண்டு  தீர்மானிக்கப்படுகின்றது?அதற்குப்பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணங்களுள் ஒன்று அந்த தனியார் கல்வி நிலையத்திற்கு வரும் மாணவர்கூட்டங்களின் எண்ணிக்கை.இதை வைத்துக்கொண்டுதான் தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் மாணவர்க்ளுக்கிடையிலாக மோதிக்கொள்வார்கள்.

அங்கு பேச்சுக்கள் நடக்கும் அங்க ஒருதராம் நோட்ஸ்மட்டும் குடுப்பாராம் பாத்து வாசிச்சிட்டுப்போவாராம் கெமிஸ்ரி எண்டால் என்னான்னு தெரியுமா?  தம்பி வெளில பிஸிக்ஸில அங்கினேக்க படிப்பிக்கிறவ எல்லாரும் இங்க என்னட்ட படிச்சவையள்தான்  தம்பி பைனல்பேப்பரில என்னவரும் எண்டு எங்களுக்கு நல்லாத்தெரியும் பயப்பிடாத ஒழுங்கா வா எல்லாம் நல்லா நடக்கும் அங்க பேப்பர் செற்பண்ணுறவன் ஏதோ பெரிய புத்திசாலியெண்டு நினைக்காத அவங்களும் நோர்மலாக்கள்தான் சோ புரொபஸேர் ரோஸாவுக்கேஒன்றும்தெரியாது என்றார் பிரபல பிஸிக்ஸ்வாத்தியார் எக்ஸாமுக்கு முதல் நடந்த இறுதி வகுப்பில் தம்பி அவன் என்ன கேள்வி போடுவான் என்று யாருக்குமே தெரியாது தலைக்கு மேல வெள்ளம் போட்டுது இனி என்ன செய்ய என்று அழுவது மாதிரி முகத்தைவைத்துக்கொண்டு கூறிய கமரன் சேர் இன்னும் கண்ணிற்குள் நிற்கின்றார்.

தனியார் கல்வி நிலையங்களில் பாடங்கள் போதித்தலுடன் பாடசாலை ஆசிரியர்களை கேவலப்படுத்தியும் அவர்களது கற்பித்தல் முறைகளை கேவலப்படுத்தியும் விரிவுரை ஆற்றுவதை தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் செய்யத்தவறுவதே இல்லை.உங்கட ஸ்கூல்ல நடக்கிற படிப்பித்தல் என்ணண்டு எங்களுக்குத்தெரியாதாக்கும்?தொடர்ந்து 2,3 வருடமாக நடக்கும் கற்பித்தலில் இந்த விரிவுரையும் சேர்ந்தே நடக்கும் எனவே எப்படி ஒரு பாடசாலை மாணவன் தனது பாடசாலை ஆசிரியரை மதிப்பான்.எமது பாடசாலையுடன் சம்பந்தப்படாத 3 ஆம் நபர் ஒருவர் எமது பாடசாலையைப்பற்றியும் அங்குள்ள ஆசிரியர்கள் பற்றியும் தரக்குறைவாக பேசும்போது அதைக்கேட்டு எக்காளமிட்டு சிரித்து கைதட்டும் துர்ப்பாக்கிய நிலையில்தான் யாழ்மாணவர்கள் இப்பொழுது இருக்கின்றார்கள்.

மாணவர்களிடம் பாடசாலை ஆசிரியர்கள் தோற்றதற்கு யார் காரணம்?காரணம் ஆசிரியர்களேதான் தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் அவர்கள் வேறு யாருமல்ல அவர்களும் பாடசாலையில் கல்விகற்பிப்பவர்களேதான்.இவ்வாறான ஆசிரியர்கள் அதுவும் பிரபலமான ஆசிரியர்கள் என்றால்(ஓரளவு பிரபலம் என்றால்கூட) பாடசாலை அதிபர் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார்.அவர்கள் எப்போதும் பாடசாலைக்குவரலாம் செல்லலாம் கற்பிக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது.ஆனால் மாதாமாதம் சம்பளத்திற்கு வக்கனையாக சென்று ஒப்பீஸ் வாசலில் நிற்பார்கள்.ஆனால் அதைவிட 30,40 மடங்கு பணத்தை தனியார் கல்வி நிலையத்தில் உழைப்பார்கள்.அப்படியானால் ஏன் இந்த அற்பத்தொகைபணத்தை வாங்குகின்றார்கள் ஓய்வு பெற்றபின் பெஞ்சன் வரும் இல்லையா அதற்குத்தான்.சரி பாடசாலையில் கற்பிக்காமல் தனியார் கல்வி நிலையத்திற்கு மட்டும் தங்கள்விசுவாசத்தைக்காட்டுவது மட்டும் இல்லாமல்  தாம் கற்பிக்கும்,சம்பளம் வாங்கும் பாடசாலைகள் உட்பட அனைத்துப்பாடசாலைகளையும் மட்டம்தட்டுவதுதான் இவர்களது அன்றாட கற்பித்தல் நடவடிக்கைகளின் இடையே உள்ள நேர இடைவெளிகளை நிரப்பும் செயல். மாணவர்கள் இவர்களுக்கு அடிமையாகவே ஆகிவிடுவதுண்டு எப்போதும் கற்பிப்பதுடன் இவ்வாறான் பிரச்சாரங்களை செய்வதால் பாடசாலையையோ அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களையோ உயர்வாக நினைகக்வேண்டும் என்ற எண்ணமோ அவர்கள் கற்பிக்கும்போது நோட்ஸ் எடுக்கவேண்டும் என்ற எண்ணமோ மாணவர்களுக்கு துளியும் வராது. இதை பரிசோதிக்க வேண்டுமெனில் உயர்தர மாணவர்கள் பாடசாலை செல்லும்போது அவர்களை அவதானித்தாலே புரிந்துவிடும் 2 ஏ கொப்பிகள் 20 அல்லது 30 ஒற்றைக்கொப்பி அப்படியே சுருட்டி தமது பொக்கட்டிற்குள் வைத்திருப்பார்கள் அதோடு ஒரு பேனை இதுதான் பாடசாலைக்கற்பித்தலின் வெற்றியின் குறிகாட்டிகள்.

பாடசாலையில் கற்பிக்கும் பாடங்கள் அனைத்தையும் அந்தக்கொப்பியிலேயே முதல்பக்கத்தில் இருந்து இறுதிப்பக்கம்வரை அல்லது இறுதிப்பக்கத்தில் இருந்து முதல் பக்கம் வரை  சாம்பாராக எழுதுவதுவார்கள்.உயர்தர மாண்வர்களின் மேசையின் கீழ் உள்ள இடைவெளியை பாடசாலை முடிந்ததும் அவதானித்தால் பலரது கொப்பிகள் அங்கே கிடைக்கும்.பலர் கொப்பிகளை பாடசாலையிலேயே விட்டு செல்வார்கள்.அப்படியெ கொண்டு சென்றாலும் பாக்கிற்குள்ளேயே தேங்கிக்கிடக்கும்.காரணம் பாடசாலை நோட்ஸ் என்பதுகூட ஒரு சுமையாகத்தான் தெரிகின்றது. ஒரு மாணவனுக்கு  ஒரு நோட்ஸ்கொப்பி தொலைந்துவிட்டது என்றதும் இதயமே வெடித்துவிடும் என்ற நிலை தோன்றுகின்றது என்றால் அது தனியார் கல்வி நிலையத்தின் கொப்பியாகத்தான் இருக்கும்.அந்தக்கொப்பியில் மட்டும் சிவப்புபேனாவால் தலையங்கமிட்டு அருகில் வேறொரு மாஜினை இட்டு ஆசிரியர்  மேலதிகமாக சொல்லும் குறிப்புக்களை எழுதி உதயன் பேப்பரில் விற்கும் கழிவுப்பேப்பரை கிலோ 50 ரூபாய்க்குவாங்கி அந்த ஒற்றைகளை இடையிடையில் செருகி அதில் குறிப்புகளை எழுதி,தரும் கணக்குகளை அதில் செய்துபார்த்துவிட்டு அதைக்கூட அந்த கேள்வி எழுதிய நோட்ஸ்கொப்பியில் கேள்வி எழுதிய பக்கத்துடன் இணைத்துவிடுவார்கள்.ஒரு  நோட்ஸ் கொப்பிக்கு இந்த அளவு மரியாதை. யாழ்ப்பாணப்பெண்கள்தான் இதில் பி.ஏஜ்.டி முடித்தவர்கள் சப்பா எப்படி வைத்திருப்பார்கள் தெரியுமா ஏதோ குழந்தையை பாராட்டி சீராட்டி வளர்ப்பதுமாதிரித்தான் அவர்களது கொப்பிகளும் இருக்கும்.ஆக பவுடர் போடாத குறைமட்டும்தான்.   நாமெல்லாம் சிவப்பு,நீலம்,கறுப்பு பேனைகளைத்தவிர வேறு பேனைகளின் பயனை நாம் அறிந்ததில்லை.ஆனால் ஒரு பொக்ஸ் ஒன்று கொண்டுவருவார்கள் ஓரளவு துருப்பிடித்த பொக்ஸ்ஸாக இருக்கும் ஆனால் அது தனது கொள்ளவைத்தாண்டி ரொம்ப வீங்கி புடைத்துப்போய் தனது வாயை மூடிக்கொண்டிருக்கும் திறந்தவுடன்தன் தெரியும் ரோஸ்,பச்சை,சிவப்பு,மஞ்சள் என பல பேனைகள் எல்லா நிறத்திலும் 2,2பேனைகள் ,நீல நிற பேனைமட்டும் 4,5 வைத்திருப்பார்கள் கேட்டால் தவறுதலாக மை தீர்ந்துவிட்டால் என்ன செய்ய?சரி ஏ.எல் முடிந்ததும் என்ன செய்வார்கள் அடுத்த பச்சில் இருக்கும்  தெரிந்த ஒருவருக்கு மிகுந்த சோகத்துடன் ஒப்படைப்பார்கள் "என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கின்றேன் இதில ஆனந்தக்கண்ணீர்மட்டும்தான் வரணும்" எங்கள் கண்களில் தாரை தாரையாக இரத்தம்.

இவ்வாறான ஒரு கொப்பி தொலைந்தால் நிச்சயமாக அந்த மாணவனுக்கு ஹார்ட் அட்டாக் வரும்.இவ்வாறு வைத்திருக்கும் கொப்பிகள் ஏனைய சில மாணவர்களால் களவாடப்படுவதும் உண்டு.இது தனியார் கல்வி நிலையத்தின் கொப்பி. ஒரு தவணை லீவு முடிந்ததும் பாடசாலைக்கு சென்று அங்கு டெஸ்குக்குள் வைத்துவிட்டு சென்ற கொப்பியை எடுத்தால் அது கிழிந்துபோய்க்கையில்வரும்  கூர்ந்து அவதானித்ததில் கறையான் அரித்திருப்பதை அவதானிக்கமுடியும் இது பாடசாலைக்கொப்பி. சோ இதற்கு மாணவர்களை  எப்படி குற்றம் செல்வது என்று தெரியவில்லை.தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு ஒழுங்காக வந்தால் கூட அங்கே ஒழுங்காக கற்பிக்கமாட்டார்க்ள்.ஏனென்றால் வகுப்பிற்குள் வேறு தனியார் கல்வி நிலையங்களில் கற்கும் மாணவன் இருக்கின்றான் அவன் தன்னிடம் இலவசமாக கற்றுவிடுவானே!ஐயா சாமி சாரே நீங்கள் பாடசாலையில் இலவசமாக கற்பிக்கவில்லை அதற்குத்தான் மாசாமாசம் சம்பளம்வாங்குகின்றீர்கள் என்று நாம் அவர்களுக்கு நினைவுபடுத்தினால்தான் உண்டு.

ஒருமுறை நடந்த சம்பவம் ஒரு வளர்ந்துவரும் தனியார் கல்வி நிலையம் நடத்தும் ஆசிரியர் ஒருவர் ஒரு தவணை(செமி)க்குரிய பேப்பரை செற் செய்தார் செமி முடிந்ததும் மாணவர்களுக்கு ரிசல்ட் வந்தது அதில் ஒரு வகுப்பில் அனேக மாணவர்களுக்கு நல்ல புள்ளி கிடைத்தது.செற்செய்த ஆசிரியர் வேறுபாடசாலை ஆசிரியர்.அந்த அதிக புள்ளி எடுத்த மாணவர்கள் வேறு ஒரு யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலையின்மாணவர்கள் அங்கு அவர்களுக்கு கற்பித்தவர் பிரபல ஆசிரியர் ஒருவர் அவர் பார்த்தார் தனது வகுப்பில் அந்த ஆசிரியரிடம் செல்லும் மாண்வர்கள் அதிகபுள்ளிகளைப்பெற்றிருக்கின்றார்கள் எனவே அவர் தனது பேப்பரை எக்ஸ்ஸாம் நடைபெறமுன்பே தனது மாணவர்களுக்கு இரகசியமாக வழங்கியிருக்கின்றார் என்று அவராக ஒருமுடிவெடுத்துவிட்டு ஏனைய ஆசிரியர்களிடம் ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்.பிரச்சனை பரீட்சைத்திணைக்களம் வரை சென்றது.அவரை விசாரணைக்குவருமாறு அழைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார்கள் அதுவும் ஒப்பீஸலாக லெட்டர் கொடுத்து அழைக்கவில்லை  மீன் வாங்கிவரும்படி மனைவி கோல் செய்து கூப்பிடுவது போல் அழைத்துஅவரை அவமதித்திருக்கின்றார்கள்.அவர் நொந்துகொண்டு வீடு வந்து சென்றபின் உண்மை புலப்பட்டது மாணவர்கள் தொலைபேசியின் உதவியுடன் எம்.சி.கியூ விடைகளை பகிர்ந்துள்ளார்கள்.அவர் திருப்பி திணைக்களத்திடம் சென்று நியாயம் கேட்டார் அவர்கள் என்தப்பதிலும் கூறவில்லை.சரி பிரச்சனை முடிந்துவிட்டது என்று இருக்க,அந்த வகுப்பின்  ஆசிரியர் என்ன செய்தார் தெரியுமா பேப்பர் செற் செய்த ஆசிரியரிடம் கற்கும் தனது வகுப்பு மாணவனை அழைத்து யாராவது அந்த ஆசிரியர் உங்களுக்கு எக்ஸாமுக்கு முதலே பேப்பர் தந்தாரா என்று கேட்டால் ஓம் என்று சொல்லு என்ன நடந்தாலும் நான் பார்த்துக்கொள்கின்றேன் என்றிருக்கின்றார்.அம்மாணவன் செய்த முதலாவது வேலை பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியரிடம் சென்று நடந்ததை கூறிவிட்டான்.இப்படியான கதைகளும் நடைபெறுகின்றன.


இப்படியும் ஒரு சம்பவம் நடந்தது ஒரு ஆசிரியரின் மாணவன் ஒரு பாடசாலையில் கற்கின்றான் அந்த ஆசிரியரும் கற்பிக்கின்றார் ஒரு நாள் அவர் வகுப்புக்கு வந்தார் படிப்பித்துக்கொண்டிருந்துவிட்டு வகுப்பை அவதானித்தார் தனது மகன் அன்று பாடசாலைக்குவரவில்லை உடனே கண்டீனுக்கு சென்றுவருகின்றேன் என்று சென்றவர்தான் அன்று மீண்டும் வகுப்பிற்குத்திரும்பவே இல்லை.இதுதான் இவ்வாறான ஆசிரியர்கள் தமது பாடசாலைகளுக்கு செலுத்தும்மரியாதை. ஒன்றை வெளிப்படையாக பச்சையாக சொல்லிக்கொள்கிறேன்.உண்மைகள் கசப்பானவைதான் ஆனால் என்ன செய்வது?உயர்தர மாணவர்கள் பாடசாலைக்குவருவதே 78% ஆன வரவு இருந்தால்தான் பைனல் எக்ஸாம் எழுதமுடியும் என்ற சட்டம் இருப்பதனால்தான்.அது மட்டும் இல்லையெனில் பாடசாலை கோவிந்தாதான்.அதுவும் இறுதிவருடத்தில் தனியார் கல்வி நிலையத்துக்கு பாடசாலை நேரத்தில் செல்வதற்குப்பாடசாலைகளும் ஒத்துளைக்கும்.மாணவர்களுக்கு இதைபப்ற்றி சிந்திக்க  அவகாசம் கிடையாது சிந்திக்கவும் முடியாது  அவர்களுக்கு முன்னால் ஏ.எல் என்ற பூதம் பெரிதாக வாயைத்திறந்துகொண்டிருக்கின்றது.சிலபஸ்முடிக்கவேண்டும் ,ரியூட்கள் செய்யவேண்டும்,75 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை வந்த முழு பாஸ்பேப்பர்களும் செய்துமுடித்திருக்கவேண்டும் என்று ஆயிரம் பிரச்சனைகள்.அவர்கள் பாவப்பட்ட ஜீவன்கள் அனுபவித்தால்தான் அந்த வேதனை எனன்வென்றுபுரியும். பாடசாலை ஆசிரியர்களுக்கிடையிலும் ஏற்ற தாழ்வுப்பிரச்சனைகள் இருக்கின்றன.உயர்தரத்தில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்காது விட்டால் ஏதோ பாவப்பட்ட ஜீவனாகத்தான் ஏனைய ஆசிரியர்களால் நோக்கப்படுவார் குறைந்தபட்சம்  தனியார்கல்வி நிலையத்திற்கு செல்லாமல் வீட்டில் 30 ற்குக்குறையாத மாணவர்களுக்கு பேர்சனல்கிளாஸ்கொடுத்தால் மன்னித்து ஏற்றுக்கொள்வார்கள் ஓகோ அப்ப நீயும் ஹோமோசேபியன்தான் என்று.
சோ வெளிப்படையாக சொன்னால் பாடசாலை ஆசிரியர்களை தோற்கடித்தது அதே பாடசாலை ஆசிரியர்கள்தான்.

கல்விச்சுமை அதுவும் ஏ.எல்லில் மற்ஸ்,பயோ எடுத்தாலே ஓட்டம்தான் இதற்குள் இந்த அரசியலை ஆராய அம்மாணவர்களால் முடியாது இது அவர்களின் தவறு அல்ல ஒட்டுமொத்த கல்விசமுதாயமும் தனியார் கல்வி நிலையங்களில் சார்ந்துவிட்டது என்று எண்ணத்தோன்றுகின்றது. மாணவர்களுக்கும் வேறுவழியில்லை. தரம் 5 இற்குக்கூட ஒரு கல்வி நிலையத்தில் 600 க்கு மேற்பட்ட மாணவர்கள் ஒன்றாக ஒரே ஹோலில்  இருந்து கற்கின்றார்கள் இறுதி மேசை மிக உயரமாம் முன்னால்  கற்பிக்கும் ஆசிரியரைத்தெரியவேண்டுமல்லவா அதுதான் வகுப்பு முடிந்ததும் ஆசிரியரின் உதவியாளர்கள் வந்து அம்மாணவர்களை வாங்கில் இருந்து இறக்கிவிடுவார்களாம் ஏனெனில் 5 ஆம் தர மாணவனால் குதிக்கமுடியாத உயரத்தில் மேசை உள்ளது???? யாழ்ப்பாணத்தில் எதற்கு மரியாதை இருக்கிறதோ இல்லையோ கல்விக்கு நிச்சயம் மரியாதை உண்டு தமது தாலிக்கொடிகளை அடகுவைதுதுக்கூட கல்விகற்பித்துவிடுவார்கள் தாய்க்குலங்கள்.மாணவர்களுக்கிடையிலான போட்டி தனியார் கல்வி நிலையங்களை நோக்கியபடையெடுப்பை வெற்றியாக்கியிருக்கின்றது.

யாழ்ப்பாணத்தின் சகல பாடசாலைகளிலும் குறைந்தது 10-20 மாணவர்கள் ஏ.எல்லில் அனைத்துப்பாடங்களிலும் சித்தியெய்த தவறிவிடுவார்கள் ஓல் எஃப் என்று கூறுவார்கள்.அந்த வருடத்தில் நாடளாவிய ரீதியில் முன்ண்னியில் நிற்கும் மாணவர்களை பாராட்டுவதுடன் நின்றுவிடாது சித்தியெய்யாதா மாணவர்களின் தோல்விக்கு  இருக்கும் பல காரணங்களுள் நானும் ஒரு காரணம் என்பது போல் பாடசாலை அத்தோல்வியை ஏற்றுக்கொள்ளும்.ஆனால் தனியார் கல்வி நிலையம் அதைப்பற்றி மூச்சே காட்டாது.

ஒரு பாடசாலையில் 250 ஏ.எல் மாணவர்கள் கற்பார்கள் 50 பேருக்கு ஓல் எப்.ஏனையோரை சமூகம் பாராட்டினாலும் பாஸாக மாணவர்களுக்காக சமூகம் பாடசாலையை குறைகூறாமல் விடாது.அதிபரும் மேடையில் எமது மாணவர்களில் 50 பேர் ஓல் எப் எடுத்திருக்கின்றார்கள் என்று கூறுவார்.

ஆனால் ஒரு கல்வி நிலையத்தில் ஓர் ஆண்டு கல்விகற்கும் மாணவர்கள் குறைந்தது 1500 பேர் இருப்பார்கள் இவர்களுள் 70 பேர் எஞ்சினியரிங்க் 50 பேர் மெடிசின் சென்றுவிடுவார்கள். மீதம் இருப்பவர்களுள் பாசாகாதவர்கள் ஒரு எஸ்,2 எஸ் களுடன் இருப்பவர்கள் எத்தனைபேர் இருப்பார்கள் என்று நினைக்கின்றீர்கள் நிச்சயம் அது மிக அதிகமான ஒன்றுதான்.ஆனால் தனியார் கல்வி நிலையம் அதைப்பற்றி என்னகூறும் தெரியுமா ஒரு இடத்தில் ரியூஸனுக்கு வந்தால் ஒரு இடத்திற்குத்தான் வரவேண்டும் 4,5 இடத்திற்கு போறது அதுதான் ரிசல்ட் இப்படி.வர்ர எண்டால் இஞ்ச ஒழுங்கா வா இல்லைண்டா வராதை.
தம்பி ஐலண்ல பெர்ஸ்ட் எடுத்தானே ஒருதன் அவன் எங்களிட்டத்தான் படிச்சவன் என்று ஆரம்பிப்பார்கள்.ஏ.எல் படிக்க ஆரம்பத்ததில் இருந்து எஞ்சினியரிங்க் மெடிசின் என்றே காதில் கேட்பதாலோ என்னவோ பெரும்பாலான மாணவர்களுக்கு வேறு என்னென்ன கோர்ஸ் மற்ஸ்,பயோ ஸ்ரீமில் இருக்கின்றது என்பதே பெர்ஸ்போம் நிரப்பும்போதுதான் தெரியும்.அட இப்படிக்கூட கோர்ஸ் இருக்கின்றதா?

ஆக ஒரு சில ஆசிரியர்கள் கூறுவார்கள் தம்பி ஐலண்டில ஒருதன் பெர்ஸ்ரா வர்ரான் எண்டால் அது அவண்ட தனிப்பட்ட திறமை இந்த தனியார் கல்வி  நிலையம் அவனுக்கு 10% கூட அதற்கு உதவியிருக்கிம் என்று என்னால் உறுதிகூறமுடியாது.இப்படியானவர்களும் இருக்கின்றார்கள்.பாடசாலையில் ஆசிரியராக இருந்துவிட்டு அதை துறந்து தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கவந்த ஆசிரியர்களும் இருக்கின்றார்கள்.அவர்களைப்பற்றிக்கதைக்கமுடியாது ஏனெனில் அவருக்கும் பாடசாலைக்கும்சம்பந்தம் இல்லை.

சோ வெற்றிபெற்றமாணவர்களின் வெற்றியை தாம் பகிர்ந்துகொள்வோம் ஆனால் தோல்வியைப்பகிர்ந்துகொள்ளமாட்டோம் அதுதான் இங்கே நடக்கின்றது.

இத்தொடரை எழுத காரணமானது ஒரு சம்பவம் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் ஏ.எல் பரீட்சைக்காக ஒரு முன்னோடிப்பரீட்சை ஒன்றை வைத்தார்கள்.அதற்கு மாணவர்க்ளை அழைத்திருந்தார்கள் வழமையாக மாணவர்கள் அதற்கு சென்றவருடங்களில் வந்திருந்தார்கள்.திருத்தப்பட்டு ராங்க் மார்க்ஸ் எல்லாம் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டும் வந்தது.ஆனால் சென்ற தடவை என்ன நடந்தது?  வழமையாக சுயன்ஸ்கோல்  மொரட்டுவ எக்ஸாமிற்காக  அந்த நேரம் கிளாஸைவைப்பதில்லை  எஞ்சினியரிங்க் மாணவர்களும் அவர்களிடம் கற்றவர்கள்தானே கேட்டதால் அனுமதித்திருந்தார்கள். ஆனால் சென்றமுறை ஒரு ஆசிரியரின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக அதே நேரத்தில் வகுப்புவைக்கப்பட்டது அங்கே சொல்லப்பட்டது  அந்த எக்ஸாம் முக்கியமென்றால் அங்கு செல் இல்லையெனில் இங்கு இருந்துபடி...

சுயன்ஸ்கோலில் இவ்வாறான தருணங்களில் ஒரு ஆயுதன் வைத்திருக்கின்றார்கள் சில ஆசிரியர்கள்.. நான் இண்டைக்கு முக்கியமான ஒரு விஸயம் படிப்பிக்கப்போறன்  இருக்கிறவன் இரு போறவன்திருப்பி இதே பாடத்துக்கு வராத வந்து பிரியோசனம் இல்லை உனக்குப்பிறகுவிளங்காது பலன் என்னண்டு பைனல்லதான் தெரியும். இந்த பேச்சுக்குப்பின் எவனாது வெளியே செல்வானா(எந்த ஒரு ஏல் மாணவனையும் கல்வியைக்கொண்டு பயப்படுத்தமுடியும் -விதி)

சோ நடந்தது அதுதான் மாணவகள் வரவில்லை 1000க்கணக்கான பேப்பர்களுடன் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டு தோல்வியில்தான் முடிந்தது.
போக்கத்தவன் யாரும் பொழுதுபோகாமல் அங்கு பேப்பரை செற்பண்ணவில்லை பரீட்சையை ஒழுங்குபடுத்தியது மொரட்டு எஞ்சினியரிங்க் மாணவர்கள்.இலங்கையில் சுப்பர் மரீட்டில் சென்ற மாணவர்கள்தான் அவர்கள் பரீட்சையில் அவர்கள் பெற்ற அனுபவம் நிச்சயம் அடுத்தவருடம் பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களுக்கு நிச்சய்ம் தேவை.ஆனால் ஒரே ஒரு தனியார் கல்வி நிலையத்தால் அனைவரும் இங்கே கட்டுப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
மொரட்டுவவா தம்பி எங்க என்ரர் பண்ணினவனக்ள் எல்லாம் எங்களிட்டத்தான் படிச்சிட்டுப்போனவை...அவையள் என்ன கிளிப்பினம் எண்டும் எங்களுக்குத்தெரியும்...எல்லாம் உங்களை மாதிரி இப்படிமுன்னால வாங்கில இருந்தவைதான்.இதைக்கேட்டு சிரித்துவிட்டு மாணவர்கள் படிப்பார்கள் ஆசிரியருக்கு நாம் விசுவாசமாக இருகக்வேண்டும் என நினைப்பார்கள் ஆனால் நாளை அவர்களும்  பொறியியல் பீடத்திற்குள்  நுழைவார்கள் நாளை அவர்களும் இதே போல் முன்னோடிப்பரீட்சை வைப்பார்கள்  ஆனால் அன்றும் இதே காரணத்திற்காக அது தடுக்கப்படலாம் அப்போது அங்கே கற்கும் மாணவர்களின் நிலையும் இவர்களது  நிலையாகவே இருக்கும். ஒரு தனி மனிதனின் பிரச்சனை சுய நலம் எத்தனை பேரைப்பாதித்திருக்கின்றது.
அவர்கள் வைக்கும் பரீட்சையை எடுத்தல் எந்த வகையில் மாணவர்களின் எதிர்காலத்தைப்பாதிக்கும் என்பது எனக்குப்புரியவில்லை.

மாணவர்களுக்கு கற்பிக்கும்போதே மருத்துவ பொறியியல் பீட மாணாவர்களைப்பற்றி மாணாவர்கள் மதிக்காதவகையில் சொற்பொழிவை ஆற்றிவிடுவார்கள்.தம்பி என்ரர் பண்ணிட்ட்டு நிக்கிறவங்கள் கனக்க சொல்லுவாங்கள் நீ அதை ஒண்டும் கேக்கதேவையில்லை நீ இங்க வா அதுவே காணும் இஞ்ச இருக்கிறபலர் அவை  சொல்லித்தான் இங்க வந்திருப்பியள் எண்டும் தெரியும்.அவ என்ரர் பண்ணிட்டு கிளாஸ் எடுத்துக்கொண்டு திரிவினம் எங்களிட்ட செலவளிச்ச காசை எடுக்கிறதுக்கு(அதை திருப்பி எடுக்கிறது என்றால் மாபியாவிலதான் சேரணும்). அவங்களை நம்பி படிக்க ஆரம்பிச்சா அவளவுதான்... இவற்றைக்கேட்டு சிரித்து தலையாட்டும்போது நாளைய நாம்தான் அவர்கள் என்பது  மாணவர்களுக்குப்புரிந்திருக்காது.


யாழ்மாணவர்களின் கல்வி நிலை குறைதல்பற்றி பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன  காரணம் என நான் கருதுபவை

இது எத்தனை  மாணவர்கள் எஞ்சினியரிங்க்,மெடிசினிற்கு செல்கின்றார்கள் என்பதைப்பற்றியல்ல ஒட்டுமொத்தமாக பேர்சன்ரேஜ்ஜில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான காரணங்கள்.

1)வாய்ப்புக்கள் அதிகரித்தமை
2)சரியான வழிகாட்டல் இல்லாமை
3)புலம் பெயர் உதவிகள் துஸ்பிரயோகப்படுத்தப்படல்

வாய்ப்புக்கள் அதிகரித்தமை-ஒரு கேள்வியைக்கேட்டுவிட்டு 5 பதில்களைக்கொடுத்தால் அதற்கு பதில் சொல்வது ஓரளவு இலகு ஆனால் ஒரு கேள்விக்கு 15 பதில்கள் இருந்தால்? அதுதான் இன்றைய யாழின் நிலை.  நான் 3 தடவைகள் ஏ.எல் எக்ஸாம் எடுத்தேன் என்ற அனுபவத்தில் நான் யாழ்ப்பாணத்தில் பிரபலமாக உள்ள 15பிஸிக்ஸ் ஆசிரியர்கள் 5 கெமிஸ்ரி ஆசிரியர்கள் 3 பயோ ஆசிரியர்களிடம் கல்வி கற்ற அனுபவம் இருக்கின்றது.கேட்க எப்படி இருக்கின்றது. இதுதான் நிலை எஞ்சினியரிங்க்,மெடிசின் சென்றவர்களிடம் அட்வைஸ் கேட்டால் ஒரு சிலர்/பலர் தமது குருவிற்கான விஸ்வாஸத்தை இப்படித்தான் காட்டுகின்றார்கள் நீ இவரிடம் செல் பிஸிக்கல் கெமிஸ்ரீ நல்லா செய்வார் நீ அவரின் நோட்ஸ் வைத்திரு இன்னோகானிக் நல்லா செய்வார் நீ இவரின் ரியூட்டை செய் அதில் ஓகானிக் கேள்விகள் மிக நன்றாக இருக்கும்.இது கெமிஸ்டிக்கு பிஸிக்ஸிற்கு ஒவ்வொரு ஆசிரியரிடம் ஒவ்வொரு சிலபஸ். இப்படி 3 பாடங்களுக்கும் நண்பர்கள்,மருத்துவ பொறியியல் பீட மாணவர்கள் கூறிய ஆசிரியர்களின் நோட்ஸ்களின் போட்டோக்கொப்பி அவர்கள் கூறிய ஆசிரியர்களின் ரியூட்கள் மொடல்பேப்பர்கள்,அதோடு வழக்கமாக கற்கும் ஆசிரியரின் நோட்ஸ் கொப்பிகள் இப்படி அனைத்தும் அதோடு 1975 ஆம் ஆண்டிலிருந்தான 3 பாடத்திற்குமான பாஸ்பேப்பர் அப்பாஸ்பேப்பர்களுக்கு வேறு வேறு ஆசிரிகள் எழுதிய விளக்க உரைகள்,புரொப் ரோஸாவின் விளக்கப்புத்தகம் எக்ஸ்ஸாம் ரைம் அண்மிக்கும்போதுதான் இந்தக்கேள்வி இந்தமுறைவருமாம் என்று கூவி விற்கப்படும் பேப்பர்கள் என அனைத்தையும் ஒரு மேசையில் வைத்துவிட்டு ஒரு டீக்கப்புடன் அதன் முன்னால் இருந்தால் அம்மாணவன்தான் வன் மான் ஆர்மி.

சராசரி மாணவனான எனக்கே அதிகாலை 4 மணிவரை கல்விகற்ற அனுபவங்கள் உண்டு.எக்ஸ்ஸாம் நெருங்கும் நேரங்களில்தான் சில பிரபல ஆசிரியர்கள் அறிக்கைவிடுவார்கள் எக்ஸாமிற்கு வரலாம் என எதிர்பார்கக்ப்படும் கேள்விகள்பற்றிய விரிவுரை ஒரு கிளாஸிற்கு 1000 ரூபா கட்டணம் வராமல் விட்டுட்டு பிறகு நான் சொன்னதில ஒருகேள்வி வந்தா பிறகு கவலைப்படுறதில பிரியோசனம் இல்லை பிள்ளையள் என்று வெற்றிலையைப்போட்டுகுதப்பிக்கொண்டு சொன்னால் பைனல் நெருங்கும் நேரத்தில் எந்த  மாணவன்தான் பயப்படமாட்டான். மாணவர்கள் ஏ.எல்லிற்குப்புதுசு சோ எக்ஸாம் பயத்தை அவர்கள் காசாக்குகின்றார்கள் ஆனால் உண்மை என்னவெனில் வருசா வருசம் ஒவ்வொரு பச்சிற்கும் பைனல் எக்ஸாம் நடக்கும்போது இந்தப்பாடத்தில கேள்விவருதாம் அந்தப்பாடத்தில கேள்விவருதாம் எனக்கூறப்படும் எதுவுமே வருவதில்லை என்று 7,8 வருடமாக கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நிச்சயம் தெரியும் ஆனால் கூறமாட்டார்கள் ஏனெனில் ஒரு நாளைக்கு ஒரு மாணவனிடமிருந்து 1000 ரூபா வருதே எதுக்கெடா இந்த மானம் கெட்டபிழைப்பென்று  விடயம் தெரிந்தபின்னர்தான் கேட்கத்தோன்றும்.

சமூகத்தவரைக்கேட்டால் கூறுவார்கள் வசதி கூடிவிட்டது எல்லாரும் போன் பைக் என்று திரிகிறார்கள் என்று.ஓரளவிற்கு அவர்கள் கூறுவதும் உண்மைதான் புலம்பெயர் தமிழர்கள் பலரை இங்கிருக்கும் பலர் ஏதோ பணம் காய்க்கும் மரங்களாகத்தான் பார்க்கின்றார்கள்.அவர்களுக்கு அங்கு ஓசியில் பணம் கிடைப்பதில்லை பனியில் புரண்டு வேலைசெய்துதான் இங்கே பணம் அனுப்புகின்றார்கள்.அதுவும் இங்கே இலங்கையில் இருப்பவன் படிக்கவேண்டும் என்பதற்காக அனுப்புகின்றார்கள் போரால் பாதிக்கப்பட்டவனுக்கு  கொஞ்சமாவது சந்தோஸம் தேவை என்பதற்காக ஐ போன் தொடக்கம் அனைத்துமே வருகின்றது ஆனால் பிள்ளை இங்கே என்ன செய்கின்றது ஐ போனுடன் மட்டுமே படுத்தெழும்பி தக்கூரியாக  பைக்கில் திரிகிறது அட அந்த மோட்டச்சைக்கிள்ள திரியிறத விட்டுட்டு படியெணை... ஏன் நீயே வேண்டித்தந்தனி மாமிதான் எனக்குவேண்டித்தந்தவ...
பெற்றோர்கள் என்ன செய்யமுடியும்.பணம் அனுப்புபவர்களும் கொஞ்சம் சிந்திக்கவேண்டும் அங்கே பணம்,அனுப்பப்பட்ட பொருளால் என்ன நடக்கின்றது என்பதை.

அதைவிட இன்னொன்றும் நடக்கின்றது  எனக்குத்தெரிந்த ஒருவருக்கு நடந்த சம்பவம் இது.அவன் ஒரு சராசரி மாணவன் அவன் சுமாராக ஏ.எல் படித்துக்கொண்டிருந்தான் திடீர் என்று சகல கிளாஸ்களையும் கட் செய்துவிட்டான்.காரணம் கேட்டபோது கூறினான் வெளி நாட்டில் இருக்கும் என் அத்தை தன்னை ஸ்பொன்ஸரில் எடுப்பதாக கூறியுள்ளார் சோ நான் ஏ.எல் படிக்கத்தேவையில்லை.என்ன இழவு சரி என்று விட்டுவிட்டால் அடுத்த வருடம் மீண்டும் வந்தான் காரணம் கேட்க இப்போது ஸ்பொன்ஸர் செய்வதில் கஸ்ரமாம் என்றான் மீண்டும் அதே அழைப்பு மீண்டும் கட் ஆனால் 3 ஆவது தடவை அவன் யாருடைய பேச்சையும் மதிக்காது அவனாக படித்து 3 எஸ்களைப்பெற்று சித்தியடைந்தான்.2 வருடங்களை வெளி நாட்டுக்கு உன்னை அழைப்பேன் என்ற தொலைபேசிப்பேச்சு மட்டும் நாசமாக்கியிருக்கின்றது.இது உண்மைக்கதை இதே கதைகள் நடந்த பல நண்பர்களை உங்களுக்கு தெரிந்திருக்கலாம் இதுவும்தான் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

அடுத்தபிரச்சனை சரியான வழிகாட்டல் இல்லாமை.பல மாணவர்கள் ஏ.எல்லிற்கு வரும்போது எதுவுமே தெரியாமல் 0வில்தான்வருகின்றார்கள்.பாடங்களுக்கு தனியார்கல்வி நிலையத்தில் யாரை தெரிவு செய்வது எத்தனை பேரிடம் கல்விகற்கவேண்டும் யார் சிலபஸ்ஸை முடிப்பார்கள், எந்தப்பயிற்சிப்புத்தகத்தைவாங்கவேண்டும் தேவையில்லாமல் தில்லை நாதன் என்பவரது கெமிஸ்ரியை எல்லாம் நான் படித்திருக்கின்றேன்..யாருடைய ரியூட்களை செய்யவேண்டும் எதுவுமே தெரியாமல்தான் வருகின்றார்கள் இதனால் என்ன நடக்கின்றது புதிதாக வரும் மாணாவர்களுக்கு தங்கள்வீர வரலாறுகளை எடுத்துரைத்து பிரைன்வோஸ் பண்ணப்பட்ட மாணவர்கள் அவர் அந்தப்பாடம் நல்லாய் செய்வார் இவர் இதைச்செய்வார் என்றதும் மனது அலைபாயும் உடனே அந்த வாத்தியாரிடம் கல்வி ஆரம்பமாகும்.இப்படியே அதிகரித்து அதிகரித்து இறுதியில் பைத்தியம்தான் பிடிக்கும். ஓ.எல் வரை கொடிகட்டிப்பறந்த மாணவர்கள் சிறியவயதில் இருந்து வகுப்பில் முன்ணனி வகித்த மாண்வர்கள் 10 ஏ எடுத்த மாணவர்கள் ஏ.எல்லி தடக்கி விழுகின்றார்கள் என்றால் அது நிச்சயம் ஆராயப்படவேண்டிய பிரச்சனைதான்.

இதற்கு தீர்வாக நான் நினைப்பது இதைத்தான் இவ்வாறான யாழ்மாணவர்களின் எதிர்காலம் ஏ.எல் படிப்பை முடித்தமாணவர்களிடம்தான் இருக்கின்றது. நீங்கள் பொறியியல் பீட மாணவராகவோ மருத்துவ பீட மாணவராகவோ இருக்கலாம் எப்படிப்படிப்பது யாரிடம் செலவது என்றெல்லாம் கேட்பார்கள் ஒழுங்காக வழி நடத்துங்கள். நீங்கள் அடிபட்ட வரலாறுகளை சொல்லி அந்த மாணவனை மிரளவைத்துவிடாதீர்கள் ஏதோ கொஞ்சம் கஸ்ரம்தான் என்று சொன்னால் போதும். இந்த ஆசிரியர் அரசியல் எல்லாம் வேண்டாம் அதை ஆராய அவனுக்கு நேரம் இருக்காது அவனுக்கு அது எந்த விதத்திலும்உபயோகப்படாது வெட்டி பஞ்சாயத்திற்கு வேண்டுமானால் உதவலாம்.1975 இல் இருந்து பாஸ் பேப்பர் செய்யவேண்டுமா என்பது தொடக்கம் பைனல் இறுதியில் எப்படி படிக்கவேண்டும் என்பது வரை அந்தந்த நேரங்களில் எடுத்துக்கூறினாலே போதும் என்றுதான் நான் நினைக்கின்றேன்.

(குருபக்தி ராஜவிசுவாசம் என்று தனியார் கல்வி நிலையத்திற்கு அதைவிட்டு வெளியேறியபின்னும் கொடிபிடிக்கும் மன நிலையில் இருந்தால் அது துர்பாக்கியம் நீங்கள் ஏ.எல் மாணவனின் மன நிலையில் இருந்து இன்னும் முன்னோக்கி நகராமல் மன நிலைவளராதவர்களாக இருக்கின்றீர்கள் என்பதுதான் அர்த்தப்பட முடியும்.இங்கே குருவிசுவாசம் குருபக்தி என்ற உப்புச்சப்பில்லாத விசுவாசத்தினால் எதிர்கால மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது.தனியார் கல்வி நிலையத்தில்  நாம் படிக்கும்போதே அடுத்த தலைமுறைமாணவர்களுக்கு நாம் தனியார் கல்வி நிலையங்களை இலவச விளம்பரப்படுத்துமளவிற்கு எமக்குத்தெரியாமலே நாம் பயிற்றுவிக்கப்பட்டோம் என்பதை உணர்ந்தால் சரி.)

 பொறியியல் மாணவர்கள் அல்லது மருத்துவ பீட மாணவர்கள் கருத்தரங்கு நடத்தினால் அதுவரவேற்கத்தக்க விடயம்.ஏ.எல் ஆரம்பித்ததும் ஸ்கூல்களில் இதை செய்தால் மாணவர்களுக்கு நல்ல ஆரம்பமாக இருக்கும் அதுவும் பொறியியல்,மருத்துவ பீட மாணவர்களே இதைசெய்தால் அவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும்  நம்பிக்கையளிக்கக்கூடியவகையிலும் இருக்கும் என எதிர்பார்க்கின்றேன். ஏனென்றால்  நாம் அவர்களுக்கு முன்பே ஏ.எல்லை முடித்த அனுபவத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை  இங்கே இருக்கும் பல ஆசிரியர்கள் அவர்களின் அரசியல்களையும் ஓரளவுக்காவது படித்த அனுபவத்தையும் கொண்டிருக்கின்ரோம்.இதை ஏ.எல் முடித்தமாணவர்களின் பொறுப்பில் விடுவதற்கு மேலதிகமான காரணங்கள் இருக்கின்றது. சமூகத்தைப்பொறுத்தவரை பாடசாலை என்பது பாடசாலை தனியார் கல்வி நிலையம் என்பது தனியார் கல்வி நிலையம் அவளவுதான்.மாணாவர்களைப்பொறுத்தவரை எப்படா பைனல் ஆனால் சகலதும் முடித்துவிட்ட உங்களுக்கு உண்மை நிலவரம் தெரியும் அதோடு நாம் மாணாவர்களாக இருந்திருக்கின்றோம் என்பதாலும் உள்ளே என்ன நடக்கின்றது என்று தெரியும்.

சமூகத்தைப்பொறுத்தவரை ஏ.எல் என்பது வெறும் கல்வி ஆனால் உள்ளே இவ்வாறு சொன்ன கதைகள் சொல்லாதகதைகள் பல இருக்கின்றன.

யாழ்மாணவர்களின் தலைவிதி உங்கள் கைகளில் இருக்கின்றது பல்கலைக்கழக மாணவர்களே!------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}