சைக்கோ பரதேசி சாரு பாலா


சேதுபடத்தில் விக்ரமின் மூளைபிரிவதைப்பார்த்தபின்னர் மீண்டும் அந்த சீனைப்பார்ப்பதில்லை என்று முடிவுசெய்யுமளவிற்கு என்னை மாற்றியிருந்தார் பாலா...
 நந்தாவில் தாய்தனக்கிடும்சோற்றில் விஸமென்றறிந்தபின்னரும் அதை கண்ணீருடன் விழுந்து விழுந்து உண்ணும் மகன் என் மனதை கசக்கிப்பிழிந்தான்

 பிதாமகன் படத்தில் சுடலையில் நின்றுகொண்டு எரிந்த சூரியாவைப்பார்த்து சித்தன்

பெத்தவ புகை ஓடிப்போச்சே
வளத்தவ புகைகூட சொல்லாமப்போச்சே...
உன் புகைமட்டும்தாண்டா கண்ணில தண்ணிய ..... என் கண்ணில தண்ணிய காட்டிட்டுப்போச்சேஏஏஏஏஏஏஏ...என்று அழத்தெரியாத சித்தன் முதல் முதலில் அழுது மனதைப்பிழிந்தான்.பரதேசி

இந்தப்படமும் அதேபாதிப்பைத்தான் ஏற்படுத்தியிருந்தது...திருப்பி மீண்டும் ஒருதடவை பார்க்கவேண்டுமா... அந்த நரகம் கண்முன்னால்  வந்து செல்கின்றது அதுவும் இறுதிக்கட்டம் இருக்கின்றதே...பாருங்கள் புரியும்
பாலாவிடம் கேட்டுக்கொள்வது இதுதான்... எப்படி வலியைமற்றவர்களுக்கு கொடுப்பது என்று மிகத்தெளிவாகதெரிந்துவைத்திருக்கின்றீர்கள்....அட போதும்யா ஒரு கட்டத்துக்குமேல் எங்களால் வலியைதாங்கமுடியும் என்ற நம்பிக்கைபோய்விடுகின்றது.

ஆனால் வரலாறு இதுதான் என்று அறியும்போது நல்லவேளை  நான் இப்படி அகப்படவில்லை என்ற எண்ணம்தான் தோன்றியது.

உணர்வுகளால் உருவாக்கப்பட்டபடம் ஆகவே வார்த்தைகளால் விபரிப்பதில் பயனில்லை என்று நம்புகின்றேன் நிச்சயம் பாலாவிற்குத்தேசியவிருது கிடைக்கும்.அதர்வாவிற்கு இது மிகவும் நல்ல பெயரை வாங்கிக்கொடுக்கும்....

இடையில் மதம் பரப்பும் சீன் ஒன்றுவரும் தரமாக இருந்தது....அவன் கங்காணியைவிட கொடுமையானவன்...

நான் கடவுளில் பாலா வெளிப்படுத்திய அவரது நாத்திகதோற் இங்கேயும் சில இடங்களில் ஒலித்திருக்கின்றது....சாமிக்கு முன் கங்காணி இருப்பார் சாமியை அதர்வா நிமிர்ந்து நின்றுவணங்குவார் கங்காணியை காலில்தொட்டு முதுகைவளைத்து கூனி வணங்குவார். இப்படி ஒரு சில சீன் இருக்கின்றது.


கொடுமையான விடயங்களில் ஒன்று எதுவெனில் முடிவை எமது கைகளில் ஒப்படைப்பது அதையேதான் பாலா இறுதியில் செய்திருக்கின்றார்....
யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில்தான் படத்தைப்பார்த்தேன்...இடைவேளையின்போது இருக்கையின் முன்னால் இருந்தவர்கள் திரும்பி பின்னே இருந்தவர்களின் முகங்களைப்பார்த்தார்கள்...சகலருக்கும் சுய நினைவுக்குவர 40 செக்கண்ட்கள் பிடித்திருந்தது...இடைவேளைகூட அப்படித்தான் இருந்தது.

இப்படியான ஒரு படத்தை எடுப்பதற்கு பாலா சைக்கோவாக இருக்கவேண்டுமென்றால் அவர் சைக்கோவாகவே இருக்கட்டும்.


நான் கடவுள் திரைப்படத்திற்கு சாரு... என்னைப்பொறுத்தவரை சரியாக நேர்மையான விமர்சனத்தைத்தான் எழுதியிருந்தார்.ஆனால் பரதேசி  அவருக்கு தலைகீழ் ஆகிவிட்டது...

என் சக எழுத்தாளர்களைப் போல் சினிமா விமர்சனம் எழுதாமல் இயக்குனர்களின் செல்லப் பிராணிகளாக இருந்தால் நானும் உருப்பட்டு ஊர் சேர்ந்து விடலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் பாரதியை ஆசானாக வரித்தவன் என்பதால் உண்மையை மட்டுமே பேசும் கெட்ட பழக்கத்தைக் கொண்டவனாக இருக்கிறேன். அதனால் பரதேசி படத்துக்கு விமர்சனம் எழுதத் துணிந்தேன்.
தமிழகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப் போகும் பரதேசி என்ற இந்தக் ‘காவிய’த்தைப் பற்றி குறைந்த பட்சம் எதுவுமே எழுதாமல் இருந்தாலாவது கொஞ்சம் உருப்பட்டு விடலாம். ஆனால் என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. ஏனென்றால், இந்தத் தட்டையான படத்தைப் பற்றி இதன் இயக்குனரே பெரியதொரு காவியத்தைப் போல் எண்ணிக் கொண்டிருக்கிறார். ஊடகங்களும் இதைக் காவியம் என்று கொண்டாட ஆரம்பித்து விட்டன. இந்தி சினிமாவில் தேவ்.டி, கேங்க்ஸ் ஆஃப் வாஸேபூர் என்ற அற்புதமான படங்களை எடுத்த அனுராக் காஷ்யப்பே ஆரம்பித்து வைத்திருக்கிறார். பரதேசி ஒரு காவியம் என்கிறார் அனுராக். இந்தியிலும் ஆங்கிலத்திலும் சப்டைட்டில் போட்டு இதை இந்தியா பூராவும் திரையிடப் போகிறேன் என்கிறார். இது போன்ற ஒரு படம் இந்தியாவிலேயே வந்ததில்லை என்கிறார். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. எப்படி ஒரு sensible-ஆன இயக்குனரால் இப்படி ஒரு மொக்கைப் படத்தை பாராட்ட முடிகிறது என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகப் புரிகிறது. தமிழனால் மிகவும் கொண்டாடப்படும் சினிமாத் துறையில் கூட சராசரித் தன்மை (mediocrity) தான் சிலாகிக்கப்படுகிறது. அதன் அடையாளம்தான் தமிழர்களால் கலைஞனாகக் கொண்டாடப்படும் பாலா. ஏற்கனவே இது பற்றி என் ஆதங்கத்தையும் கவலையையும் எழுதியிருக்கிறேன். மலையாளத்தில் அரை டஜன், கன்னடத்தில் அரை டஜன், இந்தியில் அரை டஜன் பேர் பாரதீய ஞானபீடப் பரிசு வாங்கியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் அத்தனை பேரும் அந்தப் பரிசுக்குத் தகுதியான எழுத்துக் கலைஞர்கள். ஆனால் தமிழில் கிடைத்த இரண்டே பரிசு இரண்டு வணிக எழுத்தாளர்களுக்குக் கிடைத்தது. இலக்கியவாதிகளுக்கு அல்ல. கரிச்சான் குஞ்சு, தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஞானக் கூத்தன், தேவ தேவன், இந்திரா பார்த்தசாரதி, லா. ச. ராமாமிர்தம், ஆதவன், சுஜாதா, எம்.வி. வெங்கட்ராம், ந. முத்துசாமி என்று நூறு இலக்கியவாதிகள் இருந்தும் இங்கே ஞானபீடம் வாங்கியது இரண்டு வணிக எழுத்தாளர்கள். இதேதான் பாலாவைக் கொண்டாடுவதிலும் நடந்து கொண்டிருக்கிறது.
ஆச்சரியம் இல்லை. இன்னும் ஓரிரு நாளில் பாருங்கள், ”தமிழ் சினிமாவின் காவியம் பரதேசி” என்று பத்திரிகைகள் எழுதப் போகின்றனவா இல்லையா என்று. இப்போதே சினிமாத் துறையில் பரதேசியை க்ளாஸிக் என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். ஒரு இயக்குனர் அப்படித்தான் எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். குறுஞ்செய்தி கிடைக்காத மாதிரி கமுக்கமாக இருந்து விட்டேன்.
ஏன் இந்தப் படத்தை ஒரு தட்டையான படம் என்று சொல்கிறேன்?
கதை என்ன என்று பெரிதாக விளக்கி எழுதப் போவதில்லை. 1939-ஆம் ஆண்டு சூலூர் என்ற கிராமத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வரும் கிராமத்து மக்களை பணத்தாசை காட்டி, வெகு தொலைவில் இருக்கும் தேயிலைத் தோட்டத்துக்கு அழைத்து வருகிறான் ஒரு கங்காணி. அந்த இடத்துக்கு நடந்தே வருவதற்கு நாற்பது நாட்களுக்கு மேல் ஆகிறது. வரும் வழியிலேயே ஒருத்தன் செத்து விழுகிறான். வந்த பிறகுதான் தெரிகிறது, அந்தத் தோட்டம் தப்பிக்கவே இயலாத ஒரு நரகக் குழி என்று. சாகும் வரை அங்கேயே தான் கிடந்து உழைக்க வேண்டும். இதுதான் கதை. இந்தக் கூட்டத்தில் ஒருவன் தான் ராசா (அதர்வா). கிராமத்தில் அங்கம்மாவைக் காதலிக்கிறான். அங்கம்மாவைப் பிரிந்து தேயிலைத் தோட்டத்தில் வந்து அடிமையாய் உழைக்கிறான். இதற்கிடையில் கிராமத்தில் அங்கம்மாவுக்குக் குழந்தை பிறக்கிறது. சீக்கிரம் ஊருக்குத் திரும்பி அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டி, தன் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறான் ராசா. ஆனால் நான்கு ஆண்டுகளாகியும் விடுதலை கிடைக்கவில்லை. கடைசியில் அங்கம்மாவும் அங்கேயே வந்து சேர்கிறாள். “இந்த நரகக் குழியில் வந்து விழுந்து விட்டாயே!” என்று ராசா கதறி அழுவதோடு படம் முடிகிறது.
இவ்வளவுதான் கதை. இப்படிப்பட்ட கொத்தடிமைகள் இந்திய சுதந்திரத்துக்கு முன்பு மட்டும் அல்ல; இப்போதும் இருக்கிறார்கள். குறிப்பாக வட இந்தியாவில். சென்னையிலும் கட்டிடத் தொழிலாளிகளின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இவர்கள் பெரும்பாலும் வட இந்தியர்கள். சமீபத்தில் கூட ஒரு பொறியியல் கல்லூரியில் கட்டிடம் கட்டும் போது சில தொழிலாளிகள் செத்துப் போனார்கள். இதெல்லாம் விபத்து அல்ல. கல்லூரி முதலாளிகளின் பணத்தாசையினால் நடைபெறும் கொலைகள்.
சரி, சாகும் வரை கொத்தடிமைகளாக வாழும் தொழிலாளிகளின் கதையை பாலா எப்படிப் படமாக்கியிருக்கிறார் என்பதுதான் நம்முடைய அக்கறை. இதில் இன்னொரு முக்கியமான விஷயம். படத்தின் இடைவேளை வரை அந்தக் கிராமத்து வாழ்க்கைதான் படமாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தேயிலைத் தோட்டத்துக்குக் கிளம்பி வரும் போதுதான் இடைவேளை டைட்டிலே வருகிறது. ஆக, படமே இடைவேளையின் போதுதான் ஆரம்பிக்கிறது. அதுவரை படத்தில் எதுவுமே இல்லை. ஓரிரு காட்சிகளைத் தவிர எல்லாமே செயற்கையாக இருக்கிறது. அந்த சூலூர் கிராமம் அப்பட்டமான ஒரு செட் மாதிரி இருக்கிறது. அசல் கிராமமே தெரியவில்லை. எவ்வளவு செயற்கையாக இருக்க முடியுமோ அவ்வளவு செயற்கையாக இருக்கிறது சூலூர் கிராமம். செவன் ஸ்டார் ஓட்டல்தானே கேள்விப் பட்டிருக்கிறோம்? இதில் வருவது செவன் ஸ்டார் கிராமம். அப்படித் துடைத்து விட்டாற்போல் கண்ணாடி போல் ஜொலிக்கிறது சூலூர்.
இன்னொரு செயற்கை அந்த ஹீரோயின் நடிகை வேதிகா. அவருடைய உடல் மொழியில் அத்தனை செயற்கைத்தனம் தெரிகிறது. சமீபத்திய தமிழ் சினிமாவில் இவ்வளவு செயற்கையான ஒரு நடிப்பை நான் பார்த்ததில்லை. மேலும் அவருடைய ஒப்பனை படு மோசமானது. சில பழைய தமிழ்ப் படங்களில் ஆதிவாசிகளைக் காண்பிக்கும் போது மூஞ்சியில் கரியை அப்புவார்கள் அல்லவா? அதே போல் ஏதோ ஒரு களிம்பை வேதிகாவின் முகத்திலும் உடம்பிலும் அப்பியிருக்கிறார்கள். கொடூரமாக இருந்தது.
ஒட்டு மொத்த படமே மிக பலவீனமாக எடுக்கப்பட்டிருக்கிறது. எனக்கு கமர்ஷியல் மசாலா படங்களின் மீது எந்தப் புகாரும் இல்லை. எனக்குப் பிடித்த கமர்ஷியல் படங்களில் முதன்மையானவை என சில படங்களைச் சொல்லுவேன். பாட்ஷா, அருணாச்சலம் போன்ற ரஜினி படங்கள். மன்மத லீலை போன்ற கமல் படித்த நகைச்சுவை படங்கள். வரலாறு, தரணியின் மூன்று தொடர்ச்சியான ஹிட்ஸ் தில், தூள், கில்லி (அவருடைய ஒஸ்தி ஒரு குப்பை) என்று பெரிய பட்டியலே போடலாம். அபத்தமான படமாக இருந்தாலும் துப்பாக்கி கூட என்னை இரண்டு மணி நேரம் உட்கார வைத்தது. இந்த வகையில் கௌதம் மேனனின் நடுநிசி நாய்கள், நீதானே என் பொன் வசந்தம் தவிர்த்த மற்ற எல்லா படங்களுமே உயர்தரமான பொழுது போக்குப் படங்கள். வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச் சரம், விண்ணைத் தாண்டி வருவாயா (சிம்புவையே நடிக்க வைத்திருப்பவர் பெரிய வித்தைக்காரராகத்தான் இருக்க வேண்டும்). இவருடைய பொழுதுபோக்குப் படங்களில் உச்சம் வாரணம் ஆயிரம். இந்தப் பட்டியலில் என்னை ஆகக் கவர்ந்த பொழுதுபோக்குப் படம் கஜினி. அது மெமெண்டோவின் காப்பி என்பதெல்லாம் எனக்குத் தேவையில்லாதது. ரெண்டு மணி நேரம் செமயாகப் போகிறதா? அது ஒன்றுதான் பொழுதுபோக்குப் படங்களைப் பொறுத்தவரை என்னுடைய எதிர்பார்ப்பு.
ஆனால் நான் இதே அளவுகோலை மாற்று சினிமாவுக்கு வைக்க முடியாது. உதாரணமாக, பொன்னியின் செல்வன் நாவலில் ஏன் ஷேக்ஸ்பியர் அளவுக்கு nuances இல்லை என்று நான் கேட்க முடியாது. ஏனென்றால், பொன்னியின் செல்வன் ஒரு பொழுதுபோக்கு நாவல். காவியம் அல்ல. இந்தப் பின்னணியில்தான் தமிழின் மாற்று சினிமா எனக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தருகின்றன.ஒரு தீவிர சினிமா ரசிகனை ரெண்டு மணி நேரம் உட்கார வைக்கக் கூட முடியாவிட்டால் அப்புறம் அது என்ன மாற்று சினிமா? அங்காடித் தெருவும், வழக்கு எண்ணும் சமீபத்திய உதாரணங்கள். வறுமையைப் பற்றிப் படம் எடுத்தாலே அது மாற்று சினிமா ஆகி விடுமா என்ன? அப்படியானால் தமிழில் எழுதப் பட்ட ஆயிரம் லாரி முற்போக்கு நாவல்கள் இலக்கியமாக நிலைத்திருக்க வேண்டுமே? எந்த ஒரு சினிமாவும் அதனுள்ளே கலைத்துவத்தைக் கொண்டிருக்காவிட்டால் அது சராசரியாகத்தான் போகும்.
ஒரு மக்கள் கூட்டம் தங்கள் வாழ்நாள் முழுவதும் கொத்தடிமைகளாக மாட்டிக் கொள்வது ஒரு மாபெரும் சோகம், துயரம். ஆனால் இந்த உலக வரலாற்றிலேயே ஒப்பிட்டே சொல்ல முடியாத துயரம் என்று ஒன்று உண்டானால் அது ஹிட்லரின் நாஜிப் படையினரின் சித்ரவதை முகாம்கள்தான். 90 லட்சம் யூதர்கள் ஏழு ஆண்டுக் கால அளவில் சிறுகச் சிறுகக் கொன்றார்கள் நாஜிகள். முகாமில் கூட்டம் அதிகமானால் கேஸ் சேம்பர்களில் அடைக்கப்பட்டு நிமிடங்களில் கொல்லப்பட்டார்கள். யூதக் கைதிகளின் தங்கப் பற்கள் (யூதர்கள் பணக்காரர்கள்) கிடுக்கிகளால் பிடுங்கப்பட்டன. மைனஸ் பத்து மைனஸ் இருபது குளிரில் நிர்வாணமான நிலையில் ஒரு நாளில் 18 மணி நேரம் கடும் உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். கேஸ் சேம்பரில் தலைமுடியோடு போட்டால் ஏதோ பிரச்சினை போல் இருக்கிறது. அதனால் கேஸ் சேம்பரில் போடப் படும் ஆயிரக் கணக்கான யூதர்கள் மொட்டையடிக்கப்பட்டார்கள். அந்த ஆயிரக் கணக்கான யூதர்களின் தலைமுடி மலை மலையாக அந்த முகாம்களில் குவிந்திருக்கும்.
இதை விடக் கொடுமை மனித வாழ்வில் இருக்க முடியுமா? இதை விடத் துயரமும் துக்கமும் இருண்மையும் (gloominess and darkness) இருக்க முடியுமா? ஒரு இனத்தை குண்டு போட்டு அழிப்பதை விட இது கொடூரமானது. ஏழு ஆண்டுகள் அணு அணுவாகச் சித்ரவதை செய்து சாகடித்தார்கள் நாஜிகள். சித்ரவதை முகாம்களுக்குச் செல்லும் ரயில்கள் அனைத்துமே மரண வாகனங்களாகப் பார்க்கப் பட்டன. இதன் பாதிப்பு எப்படி இருந்ததென்றால், நான் 2006-இல் ஃப்ரான்ஸிலுள்ள துலுஸ் நகரில் சில தினங்கள் தங்கியிருந்த போது ஒரு வயதான ஃப்ரெஞ்சுக்காரர் சொன்னார். இப்போது கூட ரயில்களைப் பார்த்தால் அவருக்கு நாஜிகளின் ரயில்கள் ஞாபகம் வருவதால் அவர் ரயிலிலேயே ஏறியதில்லை என்று. அது மட்டும் அல்ல; அவரைப் போல் பல முதியவர்கள் இருப்பதாகவும் சொன்னார்.
இப்பேர்ப்பட்ட வதைமுகாம்களைப் பற்றி நூற்றுக் கணக்கான படங்கள் வந்துள்ளன. அவைகளில் அநேகம் படங்களை நான் பார்த்து விட்டேன். அவற்றில் அடிக்கடி பார்த்த படங்கள் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எடுத்த Schindler's List மற்றும் ரோமன் பொலான்ஸ்கியின் பியானிஸ்ட். இந்த இரண்டு படங்களையுமே க்ளாஸிக் தரத்தில்தான் சேர்ப்பேன்; பியானிஸ்ட் ஸ்பீல்பெர்க் படத்தை விட பல மடங்கு உயர்வானதாக இருந்தாலும். ஷிண்ட்லர்ஸ் லிஸ்டில் சித்ரவதை முகாம்களில் உள்ள யூதர்களில் ஆயிரம் பேரைக் காப்பாற்றுவது நாஜிக் கட்சியைச் சேர்ந்த ஷிண்ட்லர். அந்த ஆயிரம் யூதர்களின் சந்ததிகள் இப்போது ஷிண்ட்லரின் யூதர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். ஆண்டு தோறும் ஷிண்ட்லரின் கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்துகிறார்கள் அந்த யூதர்கள்.
பியானிஸ்ட் படத்தில் வரும் நாயகன் சித்ரவதை முகாமுக்குச் செல்லாமல் தப்பி விடுகிறான். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஒரு ஆளில்லா நகரத்தில் ஒளிந்திருக்கிறான். அந்த நகரில் உள்ள அத்தனை பேரும் சித்ரவதை முகாமுக்கு அனுப்பப்பட்டு விடுகிறார்கள். யூதர் அல்லாத ஒருசிலரே அந்த நகரில் தங்கி இருக்கின்றனர். வதை முகாம்களுக்கு அனுப்பப்படும் போது அந்த யூதர்களை ஏற்றிக் கொல்லும் ரயில்களைப் பார்த்த போது துலுஸ் நகரில் நான் சந்தித்த முதிய ஃப்ரெஞ்சுக்காரர் சொன்னது ஞாபகம் வந்து கொண்டே இருந்தது. ரயில் என்பது Holocaust படங்களில் தவிர்க்க முடியாத ஒரு குறியீடாகவே இருக்கிறது. ரயிலில் புளி மூட்டையைப் போல் அடைக்கப்படுவார்கள் யூதர்கள். முகாமுக்குச் செல்லும் வரை தண்ணீர் கூட கிடையாது. வழியிலேயே பலர் செத்து விடுவார்கள். நாஜிகளின் வருகை வரை அவர்கள் அந்த ஊரின் செல்வாக்கான மனிதர்களாக வாழ்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆளில்லாத நகரில் ஒளிந்து வாழ்கிறான் பியானிஸ்ட். முதலில் சில மாதங்கள் அங்கே இருந்த வீடுகளில் புகுந்து கிடைப்பதைத் தின்று வாழ்கிறான். பிறகு அதுவும் முடியாமல் போகிறது. அந்த ஊரில்தான் நாஜி ராணுவ அதிகாரிகள் தங்கி இருக்கிறார்கள். வெளியில் வர முடியாமல் பல மாதங்கள் குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி மறைந்து கிடக்கிறான். அவன் பதுங்கியிருந்த வீட்டில் ஒரு பியானோ இருக்கிறது. பியானோ தான் அவனுக்கு சுவாசமே என்றாலும் அந்தப் பியானோவை அவனால் வாசிக்க முடியாது. வாசித்தால் சப்தம் வெளியே கேட்டு நாஜிகள் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள். அதன் பெயர் தான் காவிய சோகம். அதைத்தான் nuance என்கிறேன். அப்படியே அந்தப் பியானோவின் அருகில் அமர்ந்து பியானோவைத் தொடாமலேயே கண்களை மூடியபடி விரல்களால் காற்றிலேயே வாசிப்பான் அந்தப் பியானோ கலைஞன். அப்படியே அவனது செவிகளில் இசை அருவியாய் ஓடும். என் உயிர் போகும் வரை மறக்க முடியாத காட்சிகள் அவை. இப்படிப்பட்ட nuances பரதேசியில் ஒன்று கூட இல்லை என்பதால்தான் தட்டையான படம் என்கிறேன்.
கிட்டத்தட்ட ஒரு ஆண்டு கழிந்து, எலும்பும் தோலுமாக, செத்துப் போகும் நிலையில், சாவதற்கு முன் ஒரு கடைசி முயற்சி செய்து பார்ப்போமே என அந்த வீட்டின் பரணைத் துழாவும் போது டப்பாக்கள் கீழே விழுந்து பெரும் சப்தத்தை எழுப்புகின்றன. சத்தத்தைக் கேட்டு வீட்டின் உள்ளே வருகிறான் ராணுவ அதிகாரி.
பியானிஸ்டைப் பார்த்த உடனேயே அதிகாரிக்கு இவன் பல மாதங்களாக இங்கே ஒளிந்து இருக்கிறான் என்று தெரிந்து விடுகிறது. நீ யார் என்கிறான். இவன் விஷயத்தைச் சொல்லி, தான் அந்த ஊரில் ஒரு பிரபலமான பியானிஸ்டாக இருந்ததையும் சொல்கிறான். உடனே அதிகாரி எதிரே இருக்கும் பியானோவைப் பார்த்து “எங்கே வாசி…” என்கிறான்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}