நீயா? நானா? கோபிநாத்துக்கு அக்கறை இருக்கிறதா?


நாமக்கல்லில் இருந்து மாணவர் அரவிந்தன் அனுப்பியது
--------------------------------------------------------------------------

விஜய் டிவி கோபிநாத் நீயா? நானா? வில் தமிழக மாணவர்களுக்கு சமூக விசயங்களில் எந்த அளவுக்கு அக்கறை இருக்கிறது? என்று சென்ற மாதத்தில் (Feb 10, 2013) ஒரு நிகழ்ச்சி  நடத்தினார்.

எங்கிருந்து மாணவர்களை தேர்ந்தெடுத்தார்களோ தெரியவில்லை... மாணவர்களுக்கு தமிழக சமூக விசயங்களின் ஜீரோ அளவுக்கு அறிவு இருப்பதாக ஒரு தோற்றத்தை உண்டு பண்ணினர்.

அதை பார்த்த பலரும் இது போன்ற மாணவர்களை வைத்து கொண்டு தமிழ் சமுதாயம் என்ன செய்ய போகிறது. மாணவர்கள் சினிமா பார்க்கவும், பெண்கள் பின் சுற்றவும்தான் லாயக்கு. அந்தோ பரிதாபம்!! என்ற அளவுக்கு பேஸ்புக்கிலும், சமூக தளங்களிலும் விமர்சனங்களை எழுதித் தள்ளினர்.

என்னை போன்ற மாணவர்களுக்கு அந்த நிகழ்ச்சி பெருத்த அவமானமாகவே பட்டது. ஒரு தொலைகாட்சி ஐம்பது பேரை மாணவர்கள் பிரதிநிதியாக பிரதிபலித்து மாணவர்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் போன்ற தோற்றத்தை எவ்வளவு மலிவாக தோற்றுவித்தது.

இதோ இன்று மாணவர்கள் ஈழத்திற்காக போராட்டத்தை கையில் எடுத்து உள்ளனர். அரசியல் அமைப்புகளும், ஆட்சியாளர்களும் சற்றே அதிர்ச்சியில் தான் உள்ளனர்.

இப்போதும் மாணவர்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்றே விஜய் டிவி, நீயா நானா நிகழ்ச்சி, கோபிநாத் போன்றவர்கள் நினைக்கிறார்களா?

மாணவன் இன்று தைரியமாக சாலையில் இறங்கி போராடுகிறான். விஜய் டிவிக்கு ஈழம் தொடர்பாக மாணவர்களை அழைத்து கலந்துரையாடல் நடத்த தைரியம் இருக்கிறதா?

விஜய் டிவியை வலியுறுத்த நீயா? நானா? கோபிநாத்துக்கு அக்கறை இருக்கிறதா?

ஈழம் தொடர்பான வீடியோக்களை ஒளிபரப்பி மக்களிடையே ஈழப்பிரச்சனையை கொண்டு செல்ல விஜய் டிவி எதுவும் முயற்சி எடுத்ததா?

சமூக விசயங்களில் மிக அக்கறை கொண்ட கோபிநாத் ஈழ பிரச்சனை தொடர்பாக வாய் திறக்கலாமே?

பவர் ஸ்டாரை புரட்டி எடுத்த சமூக சிந்தனையாளர் கோபிநாத், ராஜபக்சேவை ஒரு நிகழ்ச்சியில் புரட்டி எடுக்கலாமே?

கல்லூரிகள்தோறும் சென்று மாணவர்கள் சமூக விசயங்களில் அக்கறை கொள்ளுங்கள் என்று பேருரை நடத்தும் கோபிநாத், விஜய் டிவி ஈழம் பற்றி நிகழ்ச்சி நடத்த மறுத்தால் அதிலிருந்து வெளியேறி மாணவர்களுடன் போராட முன் வருவாரா?

மாணவர்கள் போராட்டம் நடைபெற்ற எங்காவது கோபிநாத் சென்று மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தாரா?

தெரிந்தவர்கள், மாணவர்களை விமர்சித்தவர்கள் சொல்லுங்கள்.......
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}