விசித்திரமான திருமணங்கள்(தன் மகளை திருமணம் செய்தவர்...)

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன...அப்படியென்றால் சீதணங்கள்? சரி விடுங்கள்....சகலருடை வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தருணங்களில் முக்கியமானதாக அவர்களது  திருமண நாள் இருக்கும். இதனால் சிலர் திருமணங்களை பிளைட்டில் நடத்துகின்றார்கள்,சிலர் கப்பலில்,சிலர் ஆழ்கடலில்,சிலர் பரசூட்டில் குதித்துக்கொண்டே திருமணம் செய்கின்றார்கள்(திருமணம் வானில் இருந்து குதிப்பதற்கு நிகரானது என்ற சிம்பாலிக்).
பிற நாடுகளில் ஆண்கள் ஆண்களையும் பெண்கள் பெண்களையும் சட்ட அங்கீகாரத்துடனேயெ திருமணம் செய்துவாழ்கின்றார்கள்.அவர்களை எல்லாம் கீழே தள்ளிவிடும் விதத்தில்  நம்மவர்கள் சிலர் நாய்களுடனும்,கழுதைகளுடன் திருமணம் செய்து சளைத்தவர்கள் அல்லர் என நிரூபித்திருக்கின்றார்கள்.

இவற்றையெல்லாம் விட நாம் எதிர்பார்க்காத திருமணங்கள் கூட நடைபெற்றிருக்கின்றன...

Eiffel Tower ஐ திருமணம் செய்தபெண்

திருமணம் செய்த பெண்ணின் பெயர் Erika  Eiffel.பெயரின் தொடர்ச்சியில் ஈர்பிள் வந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள் ஈர்பிள் ரவரை திருமணம் செய்துகொண்டதுதடன் தனது பெயரைத்தொடர்ந்து ஈர்பிள் ரவரை சட்டரீதியாக இணைத்துக்கொண்டுள்ளார் Erika  Eiffel.
இவர் தன்னைப்போன்று பொருட்களைக்காதலிக்கும் பிற மனிதர்களுக்காக  OS Internationale என்ற அமைப்பொன்றையும் உருவாக்கியுள்ளார்.இவர் முதன் முதலில் காதலித்தது இவரது அம்பை இவர் ஒரு  archer .அடுத்ததாக இவர் காதலித்தது பேர்லின் சுவரை.அச்சுவரின் துண்டு ஒன்றை படுக்கையறையில் வைத்திருந்து அதனுடன் பிஸிக்கல் ரிலேஸன்ஸிப்பையும் வைத்திருந்தார்.இறுதியாக ஈர்பிள் ரவரைக்காதலித்து திருமணமும் செய்துகொண்டார். எப்படி ரவரைத்திருமணம் செய்துகொண்டீர்கள்?ஈர்பிள் ரவருக்கு நீங்கள் புரொப்போஸ் செய்தீர்களா என்று கேட்டதற்கு நான் புரப்போஸ் செய்யவில்லை ரவர்தான் எனக்கு புரப்போஸ் செய்தது என்று தனது பேட்டியைத்தொடர்கிறார் எரிக்கா.தன்னைத்தானே திருமணம் செய்தவர்

சீனாவைச்செர்ந்த 39 வயதான Liu Ye என்பவர் தன்னைத்தானே திருமணம் செய்துகொண்டுள்ளார்.அதுவும் அவரது திருமணத்துக்கு 100க்குமேற்பட்ட உறவினர்களை அழைத்து அவர்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.தன் உருவத்தை ரெஜிபோர்ம் துண்டொன்றில் பிறிண்ட் செய்து அதற்கு சிவப்புக்கலரில் ரெஸ்ஸையும் கொடுத்து அதையே திருமணமும் செய்துகொண்டார் Liu Ye.(ஏப்பா ரெஜிபோம் உடைஞ்சிடாது ஆவ்வ்) இத்திருமணத்தைப்பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது Liu Ye இன் பதில் "There are many reasons for marrying myself, but mainly to express my dissatisfaction with reality," Lui said. "This marriage makes me whole again. My definition of marriage is different from others." 


தன் மகளை திருமணம் செய்தவர்..

இவ்வாறு இடையிடையே நடப்பதுண்டு.முதலாவது கேஸில் ஒரு தந்தை தனது சொந்த மகளையே திருமணம் செய்தார்Mr Adesanya,  என்ற 54 வயது தந்தை இதைசெய்துள்ளார்.போலியான திருமணம்தான் British  பாஸ்போர்ட் கிடைக்கவேண்டும் என்பதற்காக  ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் உள்ள தன் மகளின் பெயரை மாற்றி பிறந்த நாளையும் மாற்றி தங்களை காதலர்களாகக்காட்டி போலி திருமணபோட்டோவை உருவாக்கி பாஸ்போர்ட்டுக்கு அப்பிளே செய்திருக்கின்றார்கள்.பாஸ்போர்ட் கிடைத்துவிட்டது.பின்னர் இருவரும் டைவேர்ஸுக்கு அப்பிளே செய்திருக்கின்றார்கள்.டைவேர்ஸ் கிடைத்தபின்னர் மகள் தன் உண்மையான கணவரையே மறுபடி திருமணம் செய்தால் சகலதும் வழமைக்கு திரும்பிவிடும் என்பதுதான் திட்டம் ஆனால் அதற்குள் போலீஸ் இந்த ஏமாற்றுவேலையை மேப்பம்பிடித்துவிட்டது அகப்பட்டுக்கொண்டார்கள்.

முதல் கேஸ் அப்படி செல்ல அடுத்த கேஸ் வருகின்றது.இது உண்மையான திருமணம் தந்தையே தன் மகளை திருமணம் செய்தார் அவர்களுக்கு ஒரு குழந்தைவேறு உருவாகியிருக்கின்றது.

(((Penny Lawrence claims to bein love with her dad and she is proud she is. The pair were pictured smiling and hugging each other under the headline “I’m pregnant with my dad’s baby and we are so in love.”For the record, it tells how a Dublin man, Garry Ryan, was 18 when his girlfriend fell
 pregnant.

Her family wouldn't let them marry, so he went off to 
the States and neversaw the daughter. The girl, Penny Lawrence, grew up and after her mother's death she set out to find her missing father. When they eventually met, reports The Sun's Dulcie Pearce, they "both felt an immediate sexual attraction."

She continues: "Within days they began an incestuous - and illegal - affair, though they each claim to be suffering from the psychologicalcondition Genetic Sexual Attraction or GSA." Penny is 28 and Garry is 46, and they live as a couple. She is quoted as saying: "I'm in love with Garry and desperately want his baby. But we have agreed that if my three-month scan shows a birth defect, we will terminate the pregnancy.")))


பேர்லின் சுவரை திருமணம் செய்தபெண் 30 வருடங்கள் பூர்த்தி

Eija-Riitta Berliner-Mauer என்ற ஜேமனியைச்சேர்ந்த 54 வயதான பெண்ணே பேர்லின் சுவரை கணவராக்கி 30 வருடங்கள் பூர்த்தியைக்கொண்டாடியவர்.இவ்வாறு பொருட்களை திருமணம் செய்தல் உறவுவைத்துக்கொள்ளலை Objectum-Sexuality என்று அழைப்பார்கள்.முன்பே ஈர்பிள் ரவரை திருமணம் செய்தவரைப்பற்றிப்பார்த்தோம்.Eija-Riitta Berliner-Mauer இடம் இதுபற்றிக்கேட்டபோது.சிறியவதில் இருந்தே அவன் மீது(பேர்லின் சுவர்) தனக்கு ஈர்ப்பு இருந்தது.ஒரு முறை டி.வியில் அவனைப்பார்த்ததும் அவன் தொடர்பான விபரங்கள் புகைப்படங்களை சேகரிக்க ஆரம்பித்தேன் பின்னர் என் 6 ஆவது பிரயாணத்தின்போது சுவருக்கு ஒரு கயிறை அணிவித்து திருமணம் செய்துகொண்டேன் என்று கூறியுள்ளார்.

வீடியோக்கேமில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்தவர்

ஜப்பானை சேர்ந்த Sal9000  என்ற நபர் Love Plus என்ற கேமில் வரும் ஒரு பெண்கதாப்பாத்திரத்தை திருமணம் செய்துகொண்டுள்ளார்.இது ஒருடேட்டிங்க் கேம் அதனாலோ என்னவோ கேமில் வரும் பெண்ணையே திருமணம் செய்துகொண்டார்.ஜப்பானில் பொருட்களை திருமணம் செய்துக்கொள்வது சட்டரீதியில் அனுமதிக்கப்பட்டாலும் கற்பனையானவைகளுடன் திருமணம் செய்தல் வித்தியாசமாக நோக்கப்பட்டது.இவர் தன் திருமணத்திற்கு உறவினர்களை அழைத்துNintendo DSi LL/XL என்ற கேம்போயில் அப்பெண்கரக்ரரின் படங்களை சிலைடராகக்காட்டியபின் அதற்கு முத்தமிட்டு திருமணம் செய்துகொண்டார்.fairground ride ஐ திருமணம் செய்த பெண்


இதுவும் அதே வகைதான்Objectum-Sexuality.நியூயோர்க் நகரைச்சேர்ந்த Amy Wolfe  என்ற 32 வயதுப்பெண்ணே ராட்டினத்தை திருமணம் செய்தவர்.இந்த ராட்டினத்தைவிட வேறுபல பொருட்களையும் காதலித்தார்(models of spaceships, the Twin Towers, a church organ and a banister, ) ஆனால் தனது மெயின் லவ்வராக தெரிவு செய்தது ராட்டினத்தைத்தான்.கடந்த 10 வருடங்களில்  அந்தராட்டினத்தில் 3000 தடவைகள்  ஓடி மகிழ்ந்திருக்கின்றார்.இதற்காக 160 மைல்கள் பிரயாணமும் செய்திருக்கின்றார்.ஒரு தடவை செல்வதற்கு 160 மைல்கள் பிரயாணிக்கவேண்டும் வருடத்திற்கு குறைந்தது 10 தடவைகள் தன் கணவரை சந்திக்க சென்றுவருவாராம்.


தலையணையை திருமணம் செய்தவர்...

காதலித்துப்பார்  நீ தலையணையை நனைப்பாய்.....என்று கவிதைவேறு இருக்கின்றது.பெரும்பாலான காதலர்கள் தங்கள் காதலை காதலிகளிடம் சொல்வதற்குமுன்னர் அவர்கள் அதிகம் பேசுவது தங்கள் தலையணைகளுடன்தான் முத்தத்தால் தலையணை நனைந்துவிடும்.இது நோர்மல் ஆனால் அப்னோர்மலான விடயம்தான் இனி வருவது.


கொரியாவைச்சேர்ந்த 28 வயதான Lee Jin-gyu என்ற மனிதர்தான் தன் தலையணையைத்திருமணம் செய்தவர்.இவர் காதலித்தது ஒரு அனிமேஸன் கதாப்பாத்திரத்தை "Fate Testarossa" என்பதுதான் இக்கதாப்பாத்திரத்தின் பெயர்.இதை தன் தலையணையில் வரைந்துவிட்டு பாதரை அழைத்து தன் உறவினர்களையும் அழைத்து தலையணைக்கு திருமண ஆடையை அணிவித்து அதையே திருமணமும் செய்துகொண்டார்  Lee Jin-gyu.

கார்களுடன் உடலுறவு,திருமணம்

Edward Smith, என்ற நபர் தனது 15ஆவது வயதில் இருந்து கார்களுடன் உடலுறவில் ஈடுபட்டுவருகின்றார்.தற்போது அவருக்கு வயது 54.white Volkswagen Beetle   Vanilla என்ற காருடன் 5 வருடங்களாக உறவில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.இவருக்கு ஹெலிஹொப்ரர்கள் கார்கள் மீதுதான் ஈடுபாடு,ஆண்,பெண்கள் மீதல்ல.இதுவரை 1000 க்கு மேற்பட்ட கார்களுடன் உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாம்பை திருமணம் செய்தபெண்

ஒரிஸாவைச்சேர்ந்த Bimbala Das என்ற  பெண்ணே பாம்பை திருமணம் செய்துள்ளார்.மணமகள் கோலத்தில்(இவர் இந்து) இப்பெண் 2000  நபர்கள் சூழ திருமணம் செய்துள்ளார்.இதைப்பற்றி அவர் கூறியது ""Though snakes cannot speak nor understand, we communicate in a peculiar way. Whenever I put milk near the ant hill where the Cobra lives, it (the snake) always comes out to drink." பாம்பை திருமணம் செய்யும் தனது ஐடியாவைக்கூறியதும் ஒரிஸாவில் அக்குறிப்பிட்ட ஊரைச்சேர்ந்த மக்கள் உடனே ஆதரவு தெரிவித்தார்களாம் ஏனென்றால் பாம்பை திருமணம் செய்தல் ஊருக்கு நன்மை விளைவிக்கும் என அவர்கள் நம்பிகின்றார்கள்.(கலாம் சேர் இந்தியா வல்லரசாகும்னு கனவுகாணச்சொன்னார் என்பது நினைவுக்கு வருகின்றது)
டொல்பினை திருமணம் செய்த பெண்

பெண்ணின் பெயர் Sharon Tendler Israel இல் திருமணம் நடைபெற்றது.டொல்பினின் பெயர் Cindy.இதைப்பற்ரி செரோன் கூறியது.
"It's not a perverted thing. I do love this dolphin. He's the love of my life," she said Saturday, upon her return to London.

When asked in the past if she had a boyfriend, she would always reply, "No. I'm going to end up with Cindy." On Wednesday, she made it official, sort of. While she acknowledged the "wedding" had no legal bearing she did say it reflected her deep feelings toward the bottlenosed, 35-year-old object of her affection.

"It's not a bad thing. It just something that we did because I love him, but not in the way that you love a man. It's just a pure love that I have for this animal," she said.

நாயை திருமணம் செய்த பெண்

ஆபிரிக்காவை சேர்ந்த Emily Mabou என்ற பெண்ணே நாயை திருமணம் செய்தவர்.


பூனையை திருமணம் செய்தவர்

ஜேர்மனியைச்சேர்ந்த போஸ்ட்மன் ஒருவர் தன் செல்லப்பிராணியாகிய பூனையை திருமணம் செய்துள்ளார்.


இறந்த தன் காதலனை திருமணம் செய்தபெண்

Magali Jaskiewicz , Jonathan George  ஆகிய இருவரும் காதலர்கள் இருவரும் திருமணம் செய்வதற்கு முடிவெடுத்தார்கள் ஆனால் திருமணத்திற்கு 2 நாட்கள் முன்பாக ஒரு பைக்விபத்தில் ஜியோர்ஜ் இறந்துவிட்டார்.மனமுடைந்தMagali சட்டரீதியாக இறந்த தன் காதலரையே திருமணம் செய்யவிரும்புவதாக கோரி திருமணமும் செய்துகொண்டார்....


###############################################################

எனது நண்பர் சோபிதன் அவர்கள் போட்டோஷொப் பிரியர் அவர் போட்டோஷொப்பிற்காக psdrasikan என்ற லைப்பூவை ஆரம்பித்துள்ளார்.உங்கள் ஆசீர்வாதத்துடன் சோபிதனுக்கு வாழ்த்துக்கள்.பதிவுலகத்திற்கு வரவேற்கின்றேன்/றோம்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}