ஆஞ்சனேயர் -மருதனாமடம்


ஆஞ்சனேயர்...

கை உடைந்துவிழுந்தபின்னர் இப்பொழுதுதான் சிலையைப்பார்த்தேன்.... ஒன்றரைக்கோடி(அதவிட அதிகமோ தெரியாது) கட்டப்பட்டதாம்...கை உடைய தெய்வக்குத்தமானது தனிக்கதை...

நவீல்ட் பாடசாலைக்கு சென்றபோது கூறினார்கள்... காது கேட்காத மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஒரு உபகரணம் இருக்கின்றது Assistive listening systems இதன் விலை 1,183 டொலர்கள், இந்த உபகரணத்திற்குப்பற்றாக்குறைநிலவுகின்றது..இதனால் இந்த உபகரணத்தை பயன்படுத்துவதற்கே ரைம்ரேபிள் போட்டுத்தான் பயன்படுத்துகின்றோம் என்று...

கோவிலுக்கு லட்சக்கணக்கில் செலவழித்தாலும் பறுவாயில்லை கோடிக்கணக்கில் புலம் பெயர்ந்து செலவழிக்கின்றார்கள்... நடிகனுக்கு பால் ஊத்துவதைவிட இது அதிக செலவுதான்...2ம் அண்ணளவாக ஒன்றுதான்...

காசு மெத்திப்போய் இருந்தால் இலங்கையின் வடபுறத்தில் இப்படியான விசேட உதவி தேவையானோருக்கான தேவைகள் நிறையவே இருக்கின்றன அதற்கு செலவழியுங்கள்..எதற்கையா கோவிலில் கொட்டுகின்றீர்கள் அதுதான் ஊருக்கு 400 கோவில்கள் இருக்கின்றதே அது போதாதா? அதுவும் ஆஞ்ச நேயர் சிக்ஸ்பாக்கோடு நிற்கின்றார்..ஏனென்றால் ஒலிம்பியாட் அவார்ட் வாங்கியவர் பாருங்கள் சிக்ஸ்பாக் யாருடைய கலாச்சாரம்?அது சரி ஒரு சிலை பார்த்தேன் பிள்ளையாரே சிக்ஸ்பாக்கோட நின்றார்..பிள்ளையாரின் சாமுந்திரிகா லட்சணத்தின்படி பிள்ளையாரின் பானைவயிறு பிரபஞ்ச உள்ளடக்கத்தின் குறியீடு...என்ன நாசமோ...கோடிக்கணக்கில் சிலைகளுக்கும்,கோவில்களுக்கும்,கல்யாணமண்டபங்களுக்கும்செலவளிப்பதுதான் மிகுந்த எரிச்சலாக இருக்கின்றது..

உண்மையில் உதவி செய்யவேண்டியவர்கள் பலர் இங்கே இருக்கின்றார்கள் ஐயா போய்ப்பாருங்கள்

ஒரு ஊருக்கு இத்தனைகோவில்கள் என்று சட்டம்போட்டால்தான் சரி அடிக்கடிகோவில்களைக்கட்டி பூசை செய்து நாம் கடவுள்களை காப்பாற்றுகின்றோம்...அவர்கள் இந்தப்பக்கம் எட்டிப்பார்த்ததாய் எனக்குத்தெரியவில்லைஆளுனர் ஒரு கண் தெரியாத பிள்ளையைக்கான ஒப்பிரேசன் செலவை முழுமையாக தானே ஏற்றிருக்கின்றாராம்...உண்மையில் பாராட்டப்படவேண்டிய விடயம்(என்ன இழவு அரசியலோதேவையான நேரத்தில் உதவி முக்கியம்)

ஏண்டா இலங்கையை எரிச்ச அனுமாருக்கு இலங்கையில சிலைன்னா வன்னிலையும் ஒரு சிலைவைக்க சொல்லனும்டா அதையும் சிக்ஸ்பாக்கோட வச்சிடுவம்டா விளங்கும்டா விளங்கும்...


"இறைவரில்லா ஆலயத்தில் ஏற்றிவைத்த தீபம்

இரவுபகல் எரிவதனால் யாருக்கென்ன லாபம்?------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}