உடற்பயிற்சி செய்யாமலே உடல் எடையை கணிசமாக குறைக்கமுடியும்இதற்காக எந்த ஸ்பெஷல் கிரீமையும் பூச தேவையில்லை.ஆயிரக்கணக்கில் காசு செலவளிக்கத்தேவையில்லை நேரடியாக விடயத்திற்கு வருகின்றேன் ஐஸ் வோட்டர் குடித்தாலே போதும்.

ஐஸ் வோட்டர் குடிக்காதே குடித்தால் உடம்பு வைத்துவிடும் குண்டகிவிடுவாய் என்று பலர் கூறக்கேட்டிருக்கின்றேன்.ஆனால் அது உண்மையா?

ஐஸ் வோட்டர் குடித்தல் எடை அதிகரிக்குமா?
இல்லை மாறாக உடல் எடை குறையும் 
விளக்கம் இதோ 

நமது உடல் வெப்பநிலை அண்ணளவாக 37 பாகை செல்சியஸ் இந்த வெப்பநிலையை விட வெப்பநிலை அதிகரித்தலோ குறைந்தாலோ அது பிரச்சனைதான்.நாம் அனைவரும் மாறாவெப்பநிலை விலங்குகள்.சூழல் வெப்பநிலை மாறினாலும் எமது உடல் வெப்பநிலை மாறாது.
எமது உடல் வெப்பநிலை எவ்வாறு மாறாமல் பேணப்படுகின்றது? இதற்கு நேரடியான பதில் எமது உடலில்  வெப்ப நிலை ஒரு சீர் திட நிலையாக்கல் பொறிமுறை என்ற ஒரு செயன்முறை நடை பெறுகின்றது அதன் மூலம் உடல் வெப்ப நிலை மாறது பேணப்படுகின்றது.ஆனால் கீழே அச்செயன் முறையில் முக்கிய பங்குவகிக்கும் சுவாசசெயன் முறை எப்படி மாறா வெப்பநிலைக்கு துணை புரிகின்றது என்பதை விளங்கிக்கொள்ள முடியும் 

எமது உடலில் இருக்கும் குளுக்கோஸ் சுவாசத்தின் மூலம் உடைக்கப்பட்டு A.T.P எனும் மூலக்கூறு உருவாக்கப்படுகின்றது.
இதன் போது பக்க விளைவாக வெப்பசக்தி வெளிவிடப்படுகின்றது.இதன் மூலம் உடல் வெப்பத்தைப்பெறுகின்றது.இதில் பங்குபெறும் முக்கிய உறுப்பு ஈரல்.

உடலுக்கு தேவையான குளுக்கோசை நாம் உண்ணும் உணவின் மூலம் பெறுகின்றோம். நிற்க 

நாம் ஐஸ் வோட்டரை குடிக்கும் போது. அது உடலினுள் செல்கின்றது.இது உடல் வெப்பநிலையை குறைக்க முற்படும்.எனவே உடல் ஐஸ் வோட்டரின் வெப்பநிலையை 37 க்கு அதிகரிக்கவேண்டும்.எனவே உடல் சக்தியை செலவழித்து ஐஸ் வோட்டரை சாதாரண வெப்பநிலைக்கு உயர்த்துகின்றது.
சாதரணமாக ஐஸ் வோட்டரை உடனடியாக சாதாரண வெப்பநிலைக்கு கொண்டுவரவேண்டுமானால் சூடக்கவேண்டும்.(இல்லாவிடினும் சும்மா ஐஸ்வோட்டரை வைத்தாலே சூடாகிவிடும் சூழலில் இருக்கும் வெப்ப சக்தியை பெற்று ஐஸ் வோட்டர் சூடாகின்றது அதாவது சூடாவதற்கு வெப்ப சக்தியை  ஏதாவது ஒரு வகையில் செலவழித்தே ஆகவேண்டும்)
1/2 லீட்டர் ஐஸ் வோட்டரின் வெப்ப நிலையை 0 இல் இருந்து 37 இற்கு அதிகரிக்க 70 கலோரி சக்தியை நாம் செலவிட வேண்டும் எனவே உடல் ஐஸ் வோட்டரை 37 இற்கு உயர்த்துவதற்கு  70 கலோரியை செலவழிக்கின்றது.ஆனால் சராசரியாக எமது ஒரு வேளை உணவில் நாம் 2000 கலோரிகளை உள்ளெடுக்கின்றோம் இதனுடன் ஒப்பிடும்போது 70 கலோரி குறைவுதான் இருந்தாலும் 1/2 லீட்டர் அருந்தினால் 70 கலோரி 
எனவே தாரளமாக ஐஸ்வோட்டர் குடிக்கலாம்.உடல் எடை குறையும்.


உடல் எடையைக்குறைக்க உடற் பயிற்சியை விட உணவுக்கட்டுப்பாடு மிக அவசியம்.உணவை பார்த்தவுடன் டயட் பறந்துவிடும் என்பது உண்மைதான்.ஆனால் சில வழிகள் உள்ளன.

கரண்டியால் உணவை உண்ணுங்கள்.(உண்பதற்கு நீண்ட நேரம் எடுக்கும் எனவே உடனே வயிறு நிறைந்ததைப்போல் உணர்வீர்கள்.இதற்கு நாம் சந்தர்ப்பம் கொடுக்காமல் அள்ளி விழுங்குவதால்தான் உண்டபின் அசையமுடியாத நிலை தோன்றுகின்றது)

உண்ணும்போது அருகே ஒரு கிளாஸ்  ஐஸ் வோட்டரை வைத்திருங்கள்.4,5 கரண்டி உணவு உள்ளே சென்றதும் சிறுது நீரை அருந்துங்கள் பின்பு உண்ணுங்கள்.

உண்பதற்கு முன் ஒரு கிளாஸ் நீர் அருந்தினால் நல்லது.முக்கிய விடயம் லீவு நாட்களில் வீட்டில் நிற்கும்போது எதாவது உண்டுகொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கும்.வீட்டில் தனிமையாக இருந்தால் சமையலறை காலியாகிவிடும் எனவே வீட்டில்  நிற்காமல் நண்பர்கள் வீட்டிற்கு சென்றுவிடுங்கள்.அல்லது ஒரு போத்தல் நீரை வைத்துக்கொள்ளுங்கள்.

அவசரமாக சாப்பிடாதீர்கள்.காலை உணவு மிக முக்கியம் முட்டையோ மீனோ காலை உணவை நன்றாக உண்ணவேண்டும்.அனால் இரவு உணவை தவிர்த்தாலும் பெரிய பாதிப்பு இல்லை.இரவு உணவை 7.30 இற்குள் உண்டுவிடவேண்டும் பகல் நேரங்களில் நாம் ஏதாவது வேலை செய்வோம் எனவே உணவு சக்தியாக மாற்றப்படும் ஆனால் இரவில் உண்டுவிட்டு உறங்கிவிடுவோம் எனவே.உடல் நாம் உண்ட உணவை உடலில் சேமிக்க ஆரம்பித்துவிடும்.

முயற்சி செய்து பாருங்கள் 


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}